Tuesday, October 22, 2013

 நான் சிறு வயதினில் மிகவும் அனுவித்து ரசித்த இந்த  பாடல் நினைவிற்கு வர பதிவு செய்கின்றேன். மிகவும் ஆழமானக கருத்துகள் நிறைந்த பாடல்.



இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை..
பொறுமையுடன் கேட்டு பாருங்கள் - அவன்
பொக்கிஷத்தை முடுவதில்லை..

இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்..
ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்..
இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்..
எண்ணங்களை இதயங்களைப் பார்கின்றவன்...

இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை..

ஆசையுடன் கேட்பவருக்கு அள்ளி தருபவன்..
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளி எரிப்பவன்..
பாசத்தோடு யாவரையும் பார்கின்றவன்..
பாவங்களை பார்வையினால் மாய்கின்றவன்..
அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்..
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்..
அவனிடத்தில் குறை அனைத்தும் சொல்லி காட்டுங்கள்..
அன்பு நோக்கு தருகவென்று அழுது கேளுங்கள்..

இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை..

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்..
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்..
வாடும் இதயம் வளர்வதற்கு வழி வகுப்பவன்..
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிப்பவன்..
அலை முடங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்..
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்..
தலை வணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்
தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்..

இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை..

No comments:

Post a Comment