Tuesday, October 22, 2013

சவால்! எந்த தெய்வமாவது இதற்கு ஈடாகுமா சொல்லுங்கள்?

கரு சுமக்கும் தாய்:
உணவு உண்ண முடியாத வாந்தியை சகித்துக்கொண்டு, நிற்க நடமாட முடியாத மயக்கத்தை சகித்துக்கொண்டு, விருப்பம்போல் நடமாட முடியாமல் பூ போல நடை நடந்து, பிடித்த உணவுகளை வெறுத்து, பிடிக்காத உணவுகளை உண்டு, தூக்கத்திலும் புரளாமல் பலநாள் தூக்கம் இழந்து, சுகமான சுமையாய் சலிக்காமல் பலநாள் சுமந்து, மாத்திரை மருந்தெடுத்து தவமாய் கனவு கண்டு, உள் உடல் கிழித்து, இரண்டாம் பிறப்பெடுத்து (அப்பப்பா... இறைவா..).. ...

பிறந்த பின்:

ரத்தத்தை பாலாக்கி, குழந்தையின் பூ உடலை நோயில் இருந்தும் கால மாற்றத்தில் இருந்தும் காப்பாற்றி, குளிப்பாட்டி, குழந்தையின் காலை கடன் தினம் முடித்து, கடன் பட்ட துணியை துவைத்து, பட்டினி கிடந்தது இருப்பதை குழந்தைக்கு ஊட்டி ஆனந்தப்பட்டு, தான் கிழிந்த துணி உடுத்தி குழந்தைக்கு புத்தாடை உடுத்தி......... முதுமையில் உன்னை முதியோர் இல்லம் சேர்க்கும் மகனையும் வாழ்த்திக் செல்லும் உன் குணம்...

போதும் தாயே போதும் உனக்கு சேவகம் செய்ய ஏழு பிறவியும் போதாதே.. கண்ணீரால் உன் பாதம் பணிகிறேன்...

No comments:

Post a Comment